Categories
தேசிய செய்திகள்

APJ Abdul Kalam செய்த மிகப்பெரிய சாதனை எது தெரியுமா?…. அவரே கூறிய பதில்….!!!!

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவரின் பேச்சுக்கு நாடே அடிமை. அவர் செய்த சாதனைகளும் ஏராளம். அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, நீங்கள் விஞ்ஞானியாகவும், குடியரசு தலைவராகவும் இருந்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய சாதனை என்று எதை நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அப்துல் கலாம், நான் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இறுதியில் தேசியகீதம் போடப்பட்டது. உடனே அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.

ஆனால் கடைசியில் இருந்த ஒரு சில மாணவர்கள் மட்டும் எழுந்து நிற்கவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு நான் அங்கு சென்று பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது அவர்கள் அனைவருமே ஊனமுற்ற குழந்தைகள் என்று. அந்தப் பிஞ்சு கால்களில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டிருந்தது. அது கிட்டத்தட்ட 4 முதல் 5 கிலோ எடை கொண்டதாக இருக்கும். அதனால் அவர்களால் எழுந்து நிற்க முடியாது.

அதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 4 கிலோவுக்கு பதிலாக வெறும் 400 கிராமில் செயற்கை கால்களை தயாரித்து கொடுத்தேன். அந்த செயற்கை கால்கள் பிஞ்சு குழந்தைகளின் கால்களில் பொருத்தப்பட்டது. அதன் பிறகு அவர்கள் அனைவரும் துள்ளி விளையாட ஆரம்பித்தனர். இதுதான் நான் செய்த சாதனைகளில் மிகப்பெரிய சாதனை என்று பெருமகிழ்ச்சி அடைந்தேன் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

Categories

Tech |