Categories
உலக செய்திகள்

காபூலில் மீண்டும் தொடங்கும் விமான சேவை…. கத்தாரின் உதவியை நாடிய தலீபான்கள்…. வெளியான தகவல்கள்….!!

காபூல் விமான நிலையத்தில் விமான சேவைகளை தொடங்குவது குறித்து கத்தாருடன்  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதன் காரணமாகவே உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்காக மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

இதனை தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் தற்காலிகமாக பயணிகளின் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தகவல் அறிவித்துள்ளனர். அதன்பின் காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அமெரிக்க உட்பட வெளிநாட்டு துருப்பினர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் கூடிய மக்கள் கூட்டம் மற்றும் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் என தொடர்ந்து  பதட்டமான சூழ்நிலையே நிலவி வந்துள்ளது. மேலும் கடந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர். இதனைத்தொடர்ந்து தலீபான்கள் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அதாவது காபூல் விமான நிலையத்தில் திரும்பவும் பழைய படி விமான சேவையை தொடங்க தலீபான்கள் கத்தார் விமான போக்குவரத்தின் உதவியை  கோரியிருந்தனர். இந்நிலையில் சமீப காலத்தில் கத்தார் விமானம் ஒன்று காபூல் விமான நிலையத்தில் தரையிறங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் காபூல் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவைகளை தொடர கத்தாருடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து ஆப்கானிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளதாக Al Jazeera கூறியதாவது “காபூல் விமான நிலையத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை கத்தார் அதிவிரைவில் தொடங்கும். மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெள்ளிகிழமை முதல் உள்நாட்டு விமான சேவைகள்  தொடங்கப்படும். வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகும்” என கூறியுள்ளார்.

Categories

Tech |