Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையிலான …. ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு…!!!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  ஒருநாள் போட்டி தொடரானது  வருகின்ற  2022-ஆம் ஆண்டிற்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டி தொடரானது  வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது .ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான நிலை நிலவை வருகிறது .

அதோடு மக்கள் நாட்டை வெளியேற விமான நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே போக்குவரத்து பாதிப்பு ,வீரர்களின் மனநிலை ஆகியவற்றை கருத்தில்  கொண்டு இந்த தொடர் வருகின்ற 2022 ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை இரு நாட்டு அணி கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

Categories

Tech |