Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் எல்லைகளில்…. தற்கொலை படையினர் நிறுத்தம்…. தலீபான்கள் அறிவிப்பு….!!

ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக எல்லைகளில் பயங்கரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மக்கள் நாட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்கவும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் தற்கொலை படையை நிறுத்த இருப்பதாக தலீபான் அறிவித்துள்ளது. இதில் தலீபான்-ஆப்கானிஸ்தான் எல்லைகளை சுற்றி குறிப்பாக பதாஷன் மாகாணத்தில் தற்கொலை மனித வெடிகுண்டுகளின் ஒரு பிரத்யேக படைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அகமது அஹ்மதி தஜிகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையான பதாஷானில் ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதல் பிரிவை உருவாக்குவது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் அந்த படைக்கு “லஷ்கர்-இ-மன்சூரி” என பெயர் சூட்டி நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என அஹ்மதி தெரிவித்தார். இது முந்தைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பாதுகாப்பு படைகளை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒரு படைப்பிரிவு என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அஹ்மதி கூறியபோது “இந்த பட்டாலியன் இல்லை என்றால் அமெரிக்காவின் தோல்வி சாத்தியமில்லை.

எனவே இந்த துணிச்சலான மனிதர்கள் இடுப்பில் வெடிகுண்டுகளை அணிந்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தளங்களை வெடிக்கச் செய்வார்கள். இவர்கள் அல்லாஹ்வின் ஒப்புதலுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் எந்த அச்சமும் இல்லாத மக்கள்” என்று அவர் தெரிவித்தார். அதன்பின் லஷ்கர்-இ-மன்சூரியன், பத்ரி 313 காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மிகவும் வசதியான மற்றும் நவீன ராணுவ குழுக்களில் ஒன்றாக அறியப்படும் மற்றொரு பட்டாலியன் என்று கூறியுள்ளார். இந்த பத்ரி 313 அனைத்து தற்கொலை மனித வெடிகுண்டுகளையும் உள்ளடக்கியதாக கருதப்படுகிறது.

Categories

Tech |