Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு நன்கொடையாக …இந்தியா வழங்கிய கொரோனா தடுப்பூசி …பாராட்டிய ஐ.நா .சபை …!!!

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரான  அன்டோனியோ குட்டரெஸ், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு   கொரோனா  தடுப்பூசியை இந்தியா  நன்கொடையாக வழங்கியது பாராட்டுக்குரியது, என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல்  நகரில் செய்தியாளர்களிடம் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் ஐ.நா .ஆப்கானிஸ்தானின் உதவி மிஷன் திட்டத்தின் ,சிறப்பு பிரதிநிதி  டிபோரா லியான்ஸ்  ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது, தற்போது ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை  வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி போடும்  பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக ஆப்கானிஸ்தானுக்கு  கொரோனா  தடுப்பூசியை இந்தியா  நன்கொடையாக வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது என்றும் ,அதற்காக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ,என்றும்  கூறினர். இந்தியா சுமார் 9 லச்சத்து 68 ஆயிரம்   கோவேக்சின் தடுப்பூசிகளை  ஆப்கானிஸ்தானுக்கு வழங்க சம்மதித்தது . இதில் முதற்கட்டமாக 5 லட்சம் டோஸ்களை இந்தியா வழங்கியுள்ளது என்று, இந்தியாவின் ஐ.நா. தூதரான டி. எஸ். திருமூர்த்தி கூறியுள்ளார்.

Categories

Tech |