Categories
உலக செய்திகள்

ஆப்கானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்பெயின் …. அதிர்ச்சியில் ஆப்கான் மக்கள் ….!!!

அனைத்து ஆப்கானிய மக்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என ஸ்பெயின் எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.இதனால் அங்குள்ள குடிமக்களையும் தங்களுக்கு உதவி செய்த ஆப்கானியர்களையும் நாட்டிற்கு அழைத் து வரும் பணியில் மற்ற நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டுப் படைகள் ஆப்கானில் இருக்கக்கூடாது என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டு தூதரகங்களில் பணியாற்றி வந்த அனைத்து ஆப்கானியர்களை நாட்டிலிருந்து  வெளியேற்ற முடியாது என ஸ்பெயின் எச்சரித்துள்ளது.

அத்துடன் எங்களால் முடிந்தவரை நாங்கள் ஆப்கானியர்களை வெளியேற்றுவோம் .ஆனால் பலரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படலாம். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் ,காபூலில் நிலவும் சூழ்நிலைதான் என ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சரான Margarita Robles கூறியுள்ளார். இதேபோல ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைவரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளரான பென் வாலஸ் எச்சரித்ததை தொடர்ந்து, தற்போது ஸ்பெயினும்  எச்சரித்துள்ளது.

Categories

Tech |