Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அப்போ யுவராஜ், இப்போ ஜடேஜா’… இருவருக்கு பின்னால் இருந்த ‘டோனியின் மாஸ்டர் பிளான்’ …!!!

கேப்டன் டோனியின் டிப்ஸ்களால் , யுவராஜ் சிங் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற  டி20 உலக கோப்பையில் ,இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக டோனி இருந்தார். அப்போது தோனி – யுவராஜ் சிங் ஜோடி இணைந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ,யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை அடித்து ,12 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அதேபோல நேற்று நடந்த போட்டியிலும் ஜடேஜாவுடன் ,கேப்டன் தோனி இணைந்து விளையாடினார். இந்த இரு  வீரர்கள் அடித்த சிக்சருக்கு பின்,தோனியின் டிப்ஸ் மிகப்பெரிய பங்காக இருந்துள்ளது. நேற்று நடந்த போட்டியில் ஜடேஜா ,தோனி சொன்ன டிப்ஸ் பற்றி  பேசினார்.

பவுலர் இந்த திசையில்தான் பந்து வீச போகிறார் ,என்று அறிந்த தோனி, ஜடேஜாவிடம் ‘இந்தத் திசையில்தான் பந்து வருகிறது, தயாராக இரு’ என்று கூறினார். இதனால் தோனி சொன்ன டிப்ஸை  கடைப்பிடித்த ஜடேஜா ,இறுதி ஓவரில் 36 ரன்களை அடித்து விளாசினார். இது போலவே கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் ,தோனி சொன்னதை அப்படியே செயல் படுத்திய  யுவராஜ், சிக்ஸர்களாக அடித்து விளாசினார். டோனி சொன்ன டிப்ஸால், இந்த 2 வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலமாக அணியை வெற்றிபெற செய்வதுடன், மற்ற வீரர்களின்  சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வர டோனி  காரணமாக இருந்துள்ளார்.

Categories

Tech |