கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அர்ஜுன் சம்பத் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இருக்கக்கூடிய மெயின் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து இயக்க தொண்டர்கள் மீது நடத்தப்படும் பெட்ரோல் குண்டு வீழ்ச்சிகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதே போல அவர்கள் தரப்பிலிருந்து பல்வேறு முழக்கங்களும் எழுப்பினர். உடனடியாக ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பல்வேறு முழக்கங்களையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆ. ராசாவின் புகைப்படத்தை காலணியாலும், காலாலும் அடித்து தாக்கி, அவருடைய புகைப்படத்தையும் கிளித்தனர். அவருடைய முகம் பதித்த உருவ பொம்மையும் எரிக்க முற்பட்டபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அவர்களை தடுத்து உருவப் பொம்மையை அவர்களிடம் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.