திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரை பேசியபோது, நீங்க திமுகவுடைய பினாமி சொத்துக்கள் எங்காவது இருக்கு என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் ரிஜிஸ்டர் பண்ணலாம். மக்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுக்கின்றோம். அதெல்லாம் ஒரு ஆப்போட லான்ச் பண்றோம்.
தமிழ்நாட்டில உங்களுக்கு தெரியும். கரூரா அண்ணே…. செந்தில் பாலாஜி பினாமி 10 பேர் இருக்காங்க. இதெல்லாம் அவங்க சொத்து என்று நீங்க என்டர் பண்ணுங்க. நாங்க அதை சரி பார்க்கிறோம். தேவையில்லாமல் உங்களுடைய டேட்டா வெளிய வராம….
ஊழலை எதிர்க்கக்கூடிய ஒரு ஒரு சாமானிய மனிதனுக்கும் இந்த ஆப் வெப்சைட்டும் கொடுக்கப்போறோம். டோல் ஃப்ரீ நம்பர் கொடுக்க போறோம். இன்னும் ஒரு மாதத்தில் லான்ச் பண்ண போறோம். ஏப்ரல் மாதத்தில் நான் சொன்னது போல… இது எல்லாம் ரிலீஸ் பண்றோம். இதுவரைக்குமே இரண்டு லட்சம் கோடி வந்திருக்கு.
2 லட்சம் கோடியை கணக்கீட வேண்டும்னா… தமிழ்நாட்டினுடைய மொத்த உள்நாட்டு மதிப்பு என்பது 25 லட்சம் கோடி. அதுல 10% திமுகவில் இருப்பவர்களிடம் மேற்போக்காக பார்க்கும்போது இருக்கின்றது. அதனால இந்த ஊழலையும் நாங்கள் மட்டும் வெளிச்சம் போடல. பொதுமக்களுக்கும் வாய்ப்பு கொடுத்து, அவங்களுக்கு தெரியும்…. போன வாரம் அமைச்சர் வந்தாங்க, பினாமி வந்தாங்க… இந்த லேண்ட்டை வாங்கிட்டு போனாங்க… அவங்களுக்கு தெரியும்.
சாமானிய மனிதர் போட்டோ எடுத்து, ஜியோ டேக் பண்ணி அதை ஏற்றலாம். எங்க கட்சியில் இருக்கக்கூடிய பின்னால் இருக்கக்கூடிய டீம் அதை போய் செக் பண்ணி, அவங்க யாருன்னு பார்த்து… நாங்க ஏப்ரல் மாதம் வெளியிடக்கூடிய பட்டியலில் அதுவும் இருக்கும். இன்னும் ஒரு மாத காலத்தில ஆப், வெப்சைட், டோல் ஃப்ரீ நம்பர் மூன்றுமே திமுகவுக்கு லாஞ்ச் பண்றோம்.
சாதாரண பொதுமக்கள் அவர்களுடைய பெயர் எதுவுமே சொல்லாம, எந்த பர்சனல்டிடைலும் நாங்க கேப்சர் பண்ண போறது இல்ல, எல்லாம் வந்துரும். அதனால செந்தில் பாலாஜி அவர்களுக்கு பில் என்ன ? அதிகமாகவே கொடுத்துறோம்.. சாராய ஆலை, கமிஷன், டாஸ்மார்க்கில் வரக்கூடிய கட்டிங், டாஸ்மாக்கில் எம்ஆர்பி போடாம வரக்கூடிய பில், சுப்ரீம் கோர்ட் கரூர் ஊழல், மொரிசியஸ் பணம்… அதாவது டிஎன்எஸ்டிசில போக்குவரத்துதுறையில் கண்டிரைக்டர் பணி முறைகேட்டில், எவ்வளவு பணம் ? மொரிசியஸ் அனுப்பினார்கள்.
அந்த பேங்க் அக்கவுண்ட் டீட்டைல் எல்லாமே அனுப்பிச்சா போச்சு. சபரீசன் அண்ணன் கையில உள்ள 14 கோடி ரூபாய் வாட்ச் எல்லாமே கொடுத்துடலாம். என்ன பிரச்சனை என்னன்னா ? அதெல்லாம் ஒரு கோடி ரூபாய்க்கு டியூட்டி டேக்ஸ் கட்டவில்லை என்றால் நீங்க ஜெயிலுக்கு ஏழு வருஷம் போகணும். அதனால் வாட்ச் டீடைல் எல்லாம் நாங்க கொடுக்கும் போது, சபரீசன் அவர்கள் டியூட்டி டேக்ஸ் கட்டின ரிசிப்ட் காட்டணும். அதனால் 70 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் நடக்காததை இப்போது திறந்து இருக்கின்றோம், அது ஏப்ரல் மாதம் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.