எஸ். பி. பி. சரண் தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
பிரபல பின்னணி பாடகர் திரு எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது மகன் திரு எஸ். பி. பி. சரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தந்தை உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.