எஸ்.பி.பி. சரண் தனது தந்தையின் உடல்நிலை தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
செப்டம்பர் 19-ஆம் தேதி காணொளி காட்சி மூலம் எஸ்.பி.பி யின் மகன் எஸ்.பி.பி. சரண், இதுவரை எனது தந்தை சீரான நிலையில் உள்ளார். அவர் தொடர்ந்து வெண்டிலட்டர் வைக்கப்பட்டுள்ளார். மற்றபடி அவரின் உடல் நிலை சீராக உள்ளது. எந்த வித தொற்றும் இல்லை. இருந்தாலும் அவரது நுரையீரல் மற்றும் மூச்சு விடுவதில் சிறிது முன்னேற்றம் தேவைப்படுகிறது.
என் தந்தைக்கு துணையாக நிற்கும் மருத்துவர்கள் பணியாளர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இங்கு நான் என் தந்தையின் உடல்நிலை ஆரோக்கியத்திற்காக வேண்டிக் கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என அவர் டுவிட்டர் பக்கத்தில் காணொலி காட்சி மூலம் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.