Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பா எங்கிட்ட பேசல… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியா பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கார்த்தி தனது தந்தையான முருகனிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் இப்போது மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என்று மறுப்பு தெரிவித்து விட்டு கார்த்தியிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் கார்த்திக்  மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது வீட்டு பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |