Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா!… ஒரு வழியா வந்துட்டு….. “துணிவு” படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி….. நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு சமுத்திரக்கனி ஜி.எம் சுந்தர் மற்றும் ஜான் கொக்கன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட்‌ ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தின் புதிய அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது அஜித் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அஜித் படத்தின் புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Categories

Tech |