தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது .இப்படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு பிஸியான ஹீரோவாக மாறியுள்ளார். அதோடு மாநாடு திரைப்படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்து தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த சிம்புவுக்கு இப்படம் கைகொடுத்தது. மேலும் 100 கோடி வசூல் சாதனையையும் படைத்துள்ளது .
தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு , பத்து தல ,கொரோனா குமார் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் .இதைத் தொடர்ந்து சிம்புவின் 50-வது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. இந்நிலையில் இறுதிச்சுற்று மற்றும் சூரரைப்போற்று போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சிம்புவை சந்தித்து கதை கூறியுள்ளார் .அந்தக் கதை சிம்புவுக்கும் பிடித்துவிட்டதாம் .இதனால் சிம்புவின் 50-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது