கறுப்பினத்தவர் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு அதிபர் மகள் இலவங்கா ஆதரவு தெரிவித்து இருப்பது ட்ரம்ப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மாதம் 25ஆம் தேதி கருப்பு இனத்தை சார்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுபோன்ற நிற வேற்றுமையால் ஏற்படும் பிரச்சனையால் பிற நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் அதிபர் டிரம்ப் போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள் என்றும், போராட்டக்காரர்களை நாய்கள், திருடர்கள் என இழிவாக பேசியதால் பெரும் போராட்டக்காரர்களுக்கு மேலும் ஆத்திரத்தை மூ ட்டியது.
இதற்கிடையில் அதிபரின் மகளான டிப்பினி கறுப்பினத்தவர்களின் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளார். கலவரத்தை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை இறக்கப் போகிறேன் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தும், அதைப் பொருட்படுத்தாமல் அவரது மகள் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக கருப்பு நிற ஃபோட்டோவை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக இணையவாசிகள் அமெரிக்க அதிபருக்கு இதைவிட வேறு அசிங்கம் இல்லை என விமர்சித்து வருகின்றனர்.