ஆப்பிள் பழம் சாப்பிட்டவுடன் இதையெல்லாம் சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகளா என்று ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்.
வருடத்தின் எல்லா காலகட்டங்களிலும் எளிதாக கிடைக்கும் பழமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆனால் இதை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதில் நம் கவனம் இருப்பது மிகவும் அவசியம் ஆகும். இது ஆரோக்கியம் மிகுந்த பழமாக இருந்தாலும் கூட, ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லையெனில் அது விஷத்தன்மை கொண்ட பழமாக மாறி நம் உடலுக்கு பல்வேறு வகையான தீமைகளை விளைவிக்கும்.
தயிர் கலந்த உணவை ஆப்பிள் சாப்பிட பிறகு உன்ன கூடாது. வேண்டுமெனில் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் தயிரை உண்ணலாம். இல்லையெனில் நீங்கள் கபம் போன்ற பிரச்சினைக்கு ஆளாவீர்கள்.மேலும் புளிப்பு வாய்ந்த எந்த உணவையும், ஆப்பிள் சாப்பிட்டவுடன் உண்ணாமல் இருப்பதே நல்லது. அது நமக்கு வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
மேலும் ஆப்பிள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மீறினால் உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்க்கச் செய்யும். மேலும் அது பூஞ்சை போன்றவை உயிர்வாழ்வதற்கு சாதகமாக்கி விடும். அது வாயு பிரச்சனையில் நம்மை கொண்டு சேர்க்கும். சிட்ரஸ் மற்றும் இனிப்பு பழங்களை உண்ட பின்னர் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பர். ஏனென்றால் அது மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றில் பாக்டீரியா வளரும் சூழலை உருவாக்கும். மேலும் முள்ளங்கியை ஆப்பிள் சாப்பிட்டவுடன் உண்பதை தவிர்ப்பது நல்லது. அது தோளில் அலர்ஜி போன்றவற்றை உருவாக்கும்