ஆண்டிற்கு 6 கோடி சம்பளம் வாங்கி வந்த ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு உயரதிகாரி, அலுவலகத்திற்கு வருமாறு கூறியதால் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியது. அதன்படி ஆப்பிள் என்ற உலகின் முன்னணி நிறுவனமும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்தது. ஆனால் தற்போது கொரோனா குறைந்து விட்டதால் அந்நிறுவனமானது, பணியாளர்களை அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால் பணியாளர்கள் சிலருக்கு இது அதிருப்தியை தந்தது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தினுடைய மெஷின் லேர்னிங் இயக்குனராக உள்ள இயன் குட்ஃபெலோ என்ற நபர், தான் வீட்டிலிருந்து பணியாற்ற விரும்புவதாக நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். ஆனால் நிறுவனம் அதனை ஏற்கவில்லை என்று தெரிகிறது.
எனவே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் வருடத்திற்கு 6 கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.