Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடக்கூடிய…ஆப்பிள் அல்வா ரெசிபி…!!

ஆப்பிள் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

ஆப்பிள் துருவியது       – 200 கிராம்
கோதுமை மாவு              – 200 கிராம்
நெய்                                     – 100 மில்லி
ஏலக்காத்தூள்                 – சிறிதளவு
சீனி                                       – 400 கிராம்
பால்                                      – 200 மில்லி
முந்திரிப்பருப்பு             – சிறிதளவு
கேசரி பவுடர்                   – சிறிதளவு

செய்முறை:

முதலில்ஆப்பிளை எடுத்து தோல் நிக்கி நன்கு துருவி கொள்ளவும். அடுத்து அடுப்பில்   பாத்திரத்தை  வைத்து 200 மி.லி பால்மற்றும் ஆப்பிள் துருவியதையும்  போட்டு வேக விடவும். பின்பு வேக வைத்ததை எடுத்து கையினால் நன்கு மசிச்சி கொள்ளவும்.

அதனுடன் கோதுமை மாவு 200 கிராம் கலந்து நன்கு கையினால் கரைத்து விடவும். மேலும் கடாயை அடுப்பில் வைத்து அதில் வேகவைத்து மசிச்ச ஆப்பிள், கேசரி பவுடர், சீனி 400 கிராம் சேர்த்து கிளறவும்.

பின்பு அல்வா பதத்திற்கு வந்தவுடன் முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். இறுதியாக அதனுடன்  நெய் விட்டு  சிறிது சிறிதாக கலந்து கிளறி பரிமாறினால் சுவையான அப்பிள் அல்வா தயார். இது உடம்புக்கு சத்தானது.

Categories

Tech |