Categories
டெக்னாலஜி

Apple iPhone 14 சீரிஸ் மாடல்கள்…. எப்போது அறிமுகம்….? வெளியான சில தகவல்கள்…!!

Apple நிறுவனத்தின் iPhone 14 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி Apple தனது iPhone மாடல்கள், Apple வாட்ச் சீரிஸ் 8, ரிடிசைன் செய்யப்பட்ட ஐபேட் 10, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மற்றும் சில சாதனங்களையும், ஐஓஎஸ் 16, வாட்ச் ஓஎஸ் 9 உள்ளிட்ட மென்பொருள்களையும் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக புது iPhone வெளியான இரு காலாண்டுக்கு பின்பு தான் இந்தியாவில் அதன் உற்பத்தி துவங்கும். புதிய iPhone 14 மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விலையை பொருத்தவரை புதிய iPhone 14 மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 200 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு Apple நிறுவனம் iPhone 14, iPhone 14 மேக்ஸ், iPhone 14 ப்ரோ மற்றும் iPhone 14 ப்ரோ மேக்ஸ் என 4 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில்  120Hz ப்ரோமோஷன் display வழங்கப்படும் என தெரிகிறது.

Categories

Tech |