Categories
டெக்னாலஜி

பல்வேறு சிறப்பம்சங்களுடன்…. வெளியாக இருக்கும் “apple iphone 14 series”….!!

apple iphone 14 series மாடல்கள் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, புதிய iphone மாடல்கள் வெளியீட்டின் போதே உற்பத்தியும் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி apple வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்படி apple தனது iphone 14 உற்பத்தியை சீனாவில் துவங்கும் போதே இந்திய சந்தையிலும் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார். இந்தியா மற்றும் சீனாவில் iphone 14 உற்பத்தி இந்த ஆண்டின் இறுதி அரையாண்டில் துவங்குகிறது.

புது iphone வெளியீட்டை தொடர்ந்து இந்திய உற்பத்தியும் துவங்க இருப்பது இதுவே முதல் முறை ஆகும். வழக்கமாக புது iphone வெளியான அரையாண்டுக்கு பின்பு தான் இந்தியாவில் அதன் உற்பத்தி துவங்கும். புதிய iphone 14 மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள boxcon ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையின் படி apple நிறுவன வருவாய் இந்தியாவில் இருமடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

இதனால் தான் apple தனது புது iphoneகளை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய முடிவு எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போது புது iphoneகளின் விலை கணிசமாக குறையவும் வாய்ப்புகள் உண்டு. தற்போதைய நிலவரபடி புதிய ஐபோன் 14 மாடல் விலை 799 dollar, இந்திய மதிப்பில் ரூ. 63,200 முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு apple நிறுவனம் iphone 14, iphone 14 max, iphone 14 pro மற்றும் iphone 14 pro max என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இவை அனைத்திலும் 120Hz promotion display வழங்கப்பட உள்ளது.

Categories

Tech |