சீனாவை சேர்ந்த இளம்பெண் ஆன்லைனில் லட்சக்கணக்கான பணத்திற்கு ஆர்டர் செய்த பொருளை பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
சீனாவைச் சேர்ந்த லியு என்ற இளம்பெண் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு உள்ளார். அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தனக்கு பிடித்த ஒரு ஐ போனை தேர்வு செய்து அதற்காக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 231 ரூபாய் கொடுத்து ஆர்டர் செய்துள்ளார். அதன்பின் அவருக்கு கொரியாவில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது.
அதில் ஐபோன் தான் இருக்கிறது என்று ஆசையாக பிரித்த லியோவிற்கு பெரிய அதிர்ச்சியும், ஏமாற்றமும் காத்திருந்தது. ஏனென்றால் அந்த பார்சலில் ஐபோன் இல்லை. அதற்கு பதிலாக ஒரு ஆப்பிள் ஜூஸ் தான் இருந்துள்ளது. அதன்பின் அவர் இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் செல்போன் நிறுவனம் மற்றும் கொரியர் நிறுவனம் விசாரணை செய்து வருகின்றனர்.