சினிமாவில் வில்லன்களாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு படத்தில் ஆப்பிள் மொபைலை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுவதாக பிரபல பாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆப்பிள் நிறுவனம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக சினிமாக்களில் ஹீரோக்களுக்கு மட்டுமே ஐபோனை உபயோகிக்கும் அனுமதியை வழங்கி உள்ளதாகவும்,
வில்லன்கள் ஐபோனை பயன்படுத்தக்கூடாது என்று கூறி அனுமதியை மறுத்து வருவதாகவும் தெரிவித்தார். சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் கதைக்காக வடிவமைக்கப்பட்டவையே தவிர நிஜமல்ல இந்த உண்மையை புரிந்து ஆப்பிள் நிறுவனம் வில்லன் காதாபாத்திரங்களும் ஐபோன் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.