லண்டனில் டெக்றோ அங்காடியில் ஆப்பிள் பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு ஐ போன் இலவசமாக கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தனக்கு வேண்டிய பொருள்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் உள்ள ட்விக்கன்ஹா பகுதியில் டெஸ்கோ என்ற அங்காடியில் நிக் ஜேம்ஸ் என்பவர் ஆப்பிள் பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
இந்நிலையில் தான் ஆர்டர் செய்த ஆப்பிள் பையை பெற்றுக்கொண்ட நிக் ஜேம்ஸ் அதனை பிரித்துப் பார்த்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் ஆர்டர் செய்த ஆப்பிள் பழங்களைத் தவிர மிகப்பெரிய பரிசுப்பொருள் ஒன்று இருந்தது. அது என்னவாகயிருக்கும் என்று பார்த்த போது புதிய வகை ஆப்பிள் ஐ போன் அந்த பைக்குள் இருந்தது. இதனைப் பார்த்த ஜேம்ஸ் திக்குமுக்காடி சந்தோசத்தில் திகைத்தார்.அதன் பின்பு இது தெரியாமல் தனக்கு கிடைத்துள்ளதாக ஜேம்ஸ் நினைத்துள்ளார்.
மேலும் ஜேம்ஸ்க்கு இந்த ஐபோன் பரிசு தவறுதலாக கிடைக்கவில்லை. டெஸ்கோ நிறுவனம் தனது அங்காடியில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் சிலருக்கு பரிசாக ஐபோன்கள் ஏர்போர்ட் போன்ற பொருள்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நிக் ஜேம்ஸ் ஆப்பிள் பழத்திற்கு பரிசாக ஆப்பிள் ஐபோன் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஜேம்ஸ் எனக்கு ஏதோ பரிசு கிடைக்கும் என்று கூறியதும் சிறிய சாதாரண பரிசாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் இந்த ஐபோனை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்துள்ளேன் என்று தெரிவித்தார். இதேபோன்று கடந்த மார்ச் மாதம் சீனாவைச் சேர்ந்த பெண் ஐ-போன் ஆர்டர் செய்த போது ஐ போனுக்கு பதிலாக ஆப்பிள் பழங்கள் கிடைத்துள்ளது அதைக் கண்டு அப்பெண் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.