டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே இப்போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் – ரோகித் சர்மா ஜோடி களமிறங்கினர்.
#klrahul 'The umpire is sleeping' pic.twitter.com/qMO8IeFhOc
— Miͪnͣᶰu Netha (@ImMinnuNetha) October 24, 2021
அப்போது 2.1 ஓவரை வீசிய ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சில் கே.எல்.ராகுல் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் ஐபிஎல் மற்றும் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வந்த ராகுல் நிச்சயம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3 ரன்னில் வெளியாகி ஏமாற்றம் அளித்தார். இதனிடையே கே.எல்.ராகுல் அவுட்டான பந்து நோ பால் என்றும், இதனை அம்பெயர் கவனிக்கத் தவறிவிட்டார் என்று ரசிகர்கள் இது குறிப்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.