இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இந்த சீசனில் பாபா பாஸ்கர் மாஸ்டர் ,மதுரை முத்து ,ஷகிலா, அஸ்வின், கனி ,பவித்ர லட்சுமி, தர்ஷா குப்தா, தீபா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் . மேலும் புகழ், பாலா ,சிவாங்கி, மணிமேகலை, சரத் உள்ளிட்ட பலர் கோமாளிகளாக வருகின்றனர் .
இந்த நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்த்துக் கோமாளிகள் செய்யும் ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் ரவுண்ட் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இதில் முதல் சீசன் போட்டியாளர்களான வனிதா ,ரம்யா பாண்டியன் ,உமா ரியாஸ் ,ரேகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர் . இதனால் இந்த வாரம் இந்த நிகழ்ச்சி மிக கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .