கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அடிபட்ட காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடிய டூ பிளெசிஸியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றன.
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய சென்னை அணி 172 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டியின்போது முதல் இன்னிங்ஸில் சென்னை அணி பீல்டிங் செய்தது. அப்போது அணியில் டூ பிளெசிஸ்-க்கு இடதுகால் முட்டிக்கு அடிபட்டு ரத்தம் வழிந்தது .
Watta Faf Sync-gams 💛#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/O746fVUZUj
— Chennai Super Kings (@ChennaiIPL) September 26, 2021
ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்போடு போட்டியில் விளையாடினார். இவரின் அர்ப்பணிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது .இதேபோல கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் சென்னை அணியில் ஷேன் வாட்சன் காலில் ரத்த காயத்துடன் விளையாடியது ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது.அதோடு நேற்றைய போட்டியில் விளையாடிய டூ பிளெசிஸ் 43 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.