சிவகங்கையில் சட்டவிரோதமான செயல்களை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலராக, டாஸ்மாக் உதவி மேலாளர் வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெற்று வருகிறது. மதுபான சில்லறை விற்பனை கடைகளில் அளவுக்கதிகமாக விற்பனையாகி வருகிறது. மேலும் சாராயம் கடத்தல் மதுபானம் விற்பனை செய்தால் போன்றவை நடைபெறுகிறது. இந்த சட்டவிரோதமான மதுபானங்கள் விற்பனை தொடர்பான புகார்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும்.
அந்த புகார்களை கண்காணிப்பதற்காக சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக, டாஸ்மாக் உதவி மேலாளர் வேலுமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.