Categories
மாநில செய்திகள்

மாநில விலங்கு வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்……. அரசாணை வெளிட்ட தமிழக அரசு…!!

மாநில வனவிலங்கு வாரியத்திற்கு  புதிய நிர்வாகிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வனவிலங்குகளை பாதுகாக்க மனித மற்றும் விலங்கு களுக்கு இணையான மோதல்களை தவிர்க்க, விலங்குகளுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க, அழியும் நிலையில் இருக்கக்கூடிய வனவிலங்குகளை பாதுகாக்க, வன விலங்குகளை வேட்டையாடுவதை தவிர்க்க உள்ளிட்ட காரணத்திற்க்காக  மாநில விலங்கு வாரியம் ஒன்றை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி வைத்தது. இந்நிலையில் தமிழக மாநில விலங்கு வாரியத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி,

Image result for மாநில விலங்கு வாரியம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான அறிக்கை ஒன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைவராகவும், வனத்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும் மற்றும் எம்எல்ஏக்கள் ஆன குன்னூர் ராமு, உளுந்தூர்பேட்டை குமரகுரு, உசிலம்பட்டி நீதிபதி ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் 14 பேர் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |