Categories
தேசிய செய்திகள்

இந்திய சட்ட ஆணையத்தின் புதிய தலைவர் நியமனம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல் ‌…‌!!!!!

மத்திய சட்ட மற்றும் நிதி மந்திரி கிரண் ரிஜிஜூ ஒரு முக்கியமான டுவிட்டர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எம். கருணாநிதி, ராகா ஆர்யா, டிபி. வர்மா, ஆனந்த் பாலிவால், நீதிபதி கே.டி. சங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் நியமித்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை கர்நாடக நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நிலையில் அதன் பிறகு அப்பதவியில் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. நடப்பாண்டில் தான் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு சட்ட தீர்த்திருத்தத்திற்கான ஆலோசனைகளை வழங்கும் பணியை மேற்கொள்கிறது.

Categories

Tech |