இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் லிபியாவுக்கான புதிய இந்திய தூதரை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் லிபியாவுக்கான புதிய இந்திய தூதரை தேர்வு செய்துள்ளது. லிபியாவுக்கான அடுத்த இந்திய தூதராக குல்காம் ஜாத்தோம் கேங்க்டே அங்கீகாரம் பெற்றுள்ளார். லிபியாவின் அண்டை நாடான துனிசியாவின் தூதராக உள்ள குல்காம் ஜாத்தோம் கேங்க்டே இரண்டு நாடுகளுக்கான தூதராக ஒரே நேரத்தில் செயல்படுவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்திய வெளியுறவு பணி அதிகாரியாக (IFS) 1994-ஆம் ஆண்டு குல்காம் ஜாத்தோம் கேங்க்டே பொறுப்பேற்றார். இதையடுத்து கேங்க்டே கூடிய விரைவில் லிபியாவுக்கான புதிய இந்திய தூதர் என்ற பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள துனிஷியா நாட்டின் துனிஸ் நகரிலிருந்து குல்காம் ஜாத்தோம் கேங்க்டே இந்த பணிகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.