Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அர்ச்சகர்கள் நியமனம்…. அரசு கொண்டு வந்த புதிய விதி… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை புதிய விதி 2020 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதன்படி 18 வயதில் இருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அச்சகர்களாக நியமிக்கலாம் என்றும்,  ஆகம பள்ளிகளில் ஓர் ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விதிகளை எதிர்த்து அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் மற்றும் பல்வேறு பிற  அமைப்புகளும்,  தனிநபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,  அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அரசு விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. ஆகம விதிப்படி அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என கோரி தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறது.

Categories

Tech |