Categories
சினிமா தமிழ் சினிமா

அப்போது தந்தை இப்போது மகன்… நெகிழ்வான தருணம்… வைரலாகும் புகைப்படம்…!!!

சிவகார்த்திகேயன் விருது பெறும் புகைப்படமும் அவரது தந்தை விருது பெரும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது .

நேற்று தமிழக இயல், இசை ,நாடக மன்றத்தின் கலைமாமணி விருதுகள் தமிழக முதல்வரின் கைகளால் 134 பேருக்கு வழங்கப்பட்டது . இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், கவுதம்மேனன், யோகிபாபு, கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோருக்கும்  இந்த விருது வழங்கப்பட்டது . கலைமாமணி விருதைப் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விருதை தனது தாய்க்கு சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and EPS his father and Kalaignar viral pic விருது

இந்நிலையில் பொறுப்பான காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய சிவகார்த்திகேயனின் தந்தை ஜி தாஸ் அவர்கள் மறைந்த தமிழக முதல்வர் கலைஞரிடம் விருது பெறும் புகைப்படத்தையும் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடிகர் சிவகார்த்திகேயன் கலைமாமணி விருது பெறும் புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். இந்த நெகிழ்வான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |