திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் 100 ஸ்டாலின்கள் வரவேண்டும். வாரிசு, வாரிசு என்று சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள் அல்லவா, அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ கல்வெட்டு போல எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தவரு பேராசிரியர் தான்.
அவரு சொன்னார்… கலைஞருக்கு மட்டும் இல்ல, எனக்கும் ஸ்டாலின் வாரிசு தான். அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு என்று துணிச்சலாக சொன்னவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள் தான். கழகத்தின் செயல் தலைவர்களாக முன்மொழிந்தவரும் நம்முடைய பேராசிரியர் அவர்கள் தான். தலைவர் மறைவுக்குப் பின், என்னை தலைவராக முன்மொழிந்தவரும் என்னுடைய பெரியப்பா பேராசிரியர் அவர்கள் தான்.
நான் இன்று இந்த அளவுக்கு தகுதி பெற்றவனாக இருக்க காரணம் அனைத்திற்கும் காரணம் நம்முடைய பேராசிரியர் தான். கோபாலபுரத்தில் தலைவரின் இல்ல தெரு இருக்கு பாருங்க, அந்த தெருயுடைய மூலைப் பகுதியில 5, 6 கடைகள் இருக்கு. அதுல ஒரு கடை பார்பர் ஷாப். முடி திருத்தும் நிலையம். அந்த இடத்தில்தான் என் அலுவலகத்தை ஆரம்பித்தேன்.
ஏன் கோட்டை காக்கக்கூடிய அந்தப் பொறுப்பும் இன்னைக்கு கிடைச்சிருக்குன்னா… தமிழகத்தை காக்கக்கூடிய பொறுப்பும் கிடைச்சுருக்கானா… கலைஞருடைய ஆற்றல், ஸ்டாலினுடைய செயல் தெரிகிறது என்று 40 ஆண்டுகள் முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் தான் என தெரிவித்தார்.