Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

“வங்கி தகவல் திருட்டு” Phone-ல் கேம்ஸ் ஆடுபவரா நீங்கள்…? உடனே இந்த 7 APPS-ஐ நீக்குங்க….!!

இன்றைய உலகில் செல்போன் உபயோகிக்காத நபர்களை காண்பதே அரிது. இந்தியாவில் கூட தற்போது ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் சிறுவர்கள் கூட செல்போன் உபயோகிக்க தொடங்கிவிட்டார்கள். ஒருபுறம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாம் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறோம் என்ற நன்மை இருந்தாலும், மற்றொருபுறம் இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வகையில், பல செயலிகள் மக்களின் வங்கி தகவல் உட்பட முக்கியமான தகவல்களை திருடுவதாக தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு அவை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்,

அவாஸ்ட் செக்யூரிட்டி நிறுவனம் தனிநபர்களின் தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை திருடும் 7 புதிய செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த செயலிகள் குறிப்பாக ஆன்லைன் கேம் விளையாடுபவர்களின் தகவல்களை எளிதாக திருடுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த   Skins , Mods, Maps For Minecraft PE, Skins for Roblox, Live wallpapers HD & 3D Background, Mastercraft For Minecraft, Master for Minecraft, Boys and girls Skins, Maps Skins and Mods for Minecraft

மேற்கண்ட செயலியை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால் உடனடியாக பாதுகாப்பிற்காக சில நாட்களுக்கு தற்காலிகமாக மறு  அறிவிப்பு வரும் வரை அன்இன்ஸ்டால் செய்து விடுங்கள் அல்லது இந்த செயலிகளை பார்த்ததே இல்லை என்றாலும் பரவாயில்லை தெரிந்து கொள்வது நல்லதுதானே. 

Categories

Tech |