இன்றைய நாள் : ஏப்ரல் 02
கிரிகோரியன் ஆண்டு : 92 ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 93 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு : 273 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க மாநிலம்) முதற்தடவையாகக் கண்டார்.
1755 – பிரித்தானியக் கடற்படைத்தளபதி வில்லியம் ஜேம்சு இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள மராத்தர்களின் பொற்கோட்டையைக் கைப்பற்றினார்.
1800 – பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாவது தன்னாட்சியுரிமை கொண்ட கிரேக்க மாநிலம் செப்டின்சுலார் குடியரசு கான்ஸ்டண்டினோபில் உடன்பாடு மூலம் அமைக்கப்பட்டது.
1800 – லுடுவிக் வான் பேத்தோவன் தனது முதலாவது சிம்பொனியை வியன்னாவில் அரங்கேற்றினார்.
1801 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரித்தானியக் கடற்படை தென்மார்க்குக் கடற்படைக் கப்பற்தொகுதியைக் கைப்பற்றியது.
1851 – நான்காம் இராமா தாய்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
1900 – புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் தீர்மானம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1902 – உருசியப் பேரரசின் உட்துறை அமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1902 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத் திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திறக்கப்பட்டது.
1911 – ஆத்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.
1917 – முதல் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் செருமானியப் பேரரசு மீது போர்ப் பிரகடனத்தை அறிவிக்க சட்டமன்றத்தில் ஆணை கேட்டார்.
1921 – இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்டது.
1930 – செவ்தித்து பேரரசி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து முதலாம் ஹைலி செலாசி எத்தியோப்பியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1972 – 1950களில் கம்யூனிஸ்டாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடிகர் சார்லி சாப்ளின் முதற்தடவையாக அமெரிக்கா திரும்பினார்.
1975 – வியட்நாம் போர்: வட வியட்நாமியப் படையினரின் ஊடுருவலை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் ஏதிலிகளாக குவாங்கு காய் மாகாணத்தை விட்டு வெளியேறினர்.
1976 – இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1979 – சோவியத், சிவெர்திலோவ்சுக் நகரில் உள்ள உயிரி-ஆயுத ஆய்வுகூடத்தில் தவறுதலாக ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகள் வெளியேற்றப்பட்டதால் 66 பேர் உயிரிழந்தனர், கணக்கிலடங்கா உயிரினங்கள் கொல்லப்பட்டன.
1982 – போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகள் மீது அர்கெந்தீனா போர் தொடுத்தது.
1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
1984 – ராகேஷ் சர்மா சோயூஸ் டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989 – கியூபாவுடனான உறவுகளை சீர் செய்யும் நோக்கில் பிடல் காஸ்ட்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் கியூபாவின் அவானா நகரை வந்தடைந்தார்.
1992 – யுகொசுலாவியாவின் பிசெல்சினா நகரில் 42 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2002 – இசுரேலியப் படைகள் பெத்லகேம் பிறப்பிடத் தேவாலயத்தைச் சுற்றிவளைத்ததை அடுத்து, பாலத்தீனப் போராளிகள் அங்கிருந்து விலகினர்.
2006 – அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் வீசிய சுழற்காற்றினால் 29 பேர் உயிரிழந்தனர்.
2007 – சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2007 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.
2011 – மும்பையில் துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 6 இழப்புகளால் வென்று உலகக் கோப்பையைப் பெற்றது.
2012 – கலிபோர்னியாவில் ஒயிக்கோசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.
2014 – அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில், இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்தனர்.
2015 – கென்யாவின் கரிசா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
742 – சார்லமேன், புனித உரோமைப் பேரரசர் (இ. 814)
1566 – மக்தலேனா தே பாசி, இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர் (இ. 1607)
1618 – பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி, இத்தாலியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1663)
1647 – மரியா சிபில்லா மெரியன், செருமானிய-இடச்சு தாவரவியலாளர் (இ. 1717)
1725 – கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1798)
1788 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனியக் கவிஞர் (இ. 1862)
1805 – ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், தென்மார்க்கு எழுத்தாளர் (இ. 1875)
1842 – தோமினிக் சாவியோ, இத்தாலியப் புனிதர் (இ. 1857)
1881 – வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1925)
1884 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழகத் தமிழறிஞர், சொற்பொழிவாளர் (இ. 1944)
1891 – மக்ஸ் ஏர்ண்ஸ்ட், செருமானிய ஓவியர், கவிஞர் (இ. 1976)
1914 – அலெக் கின்னஸ், ஆங்கிலேய நடிகர் (இ. 2000)
1924 – நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், தமிழக நாதசுவரக் கலைஞர்
1942 – ரோஷன் சேத், இந்திய-ஆங்கிலேய நடிகர்
1969 – அஜய் தேவ்கான், இந்திய நடிகர்
1977 – மைக்கல் பாஸ்பெந்தர், செருமானிய-ஐரிய நடிகர்
1981 – மைக்கல் கிளார்க், ஆத்திரேலியத் துடுப்பாளர்
1982 – டேவிட் ஃபெரர், எசுப்பானிய தென்னிசு வீரர்
இறப்புகள்
1672 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய மதப்பரப்புனர், புனிதர் (பி. 1654)
1872 – சாமுவெல் மோர்சு, அமெரிக்க ஓவியர், தந்திக்குறிப்பைக் கண்டுபிடித்தவர் (பி. 1791)
1952 – பெர்னார்டு இலியோத், பிரான்சிய வானியலாளர் (பி. 1897)
1973 – மு. தளையசிங்கம், இலங்கை எழுத்தாளர் (பி. 1935)
2005 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (பி. 1920)
2012 – எம். சரோஜா, தென்னிந்திய நகைச்சுவை நடிகை
2018 – வின்னி மண்டேலா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1936)
சிறப்பு நாள்
பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்
உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்