இன்றைய நாள் : ஏப்ரல் 10
கிரிகோரியன் ஆண்டு : 100 ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 101 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு : 265 நாட்கள் உள்ளன
இன்றைய தின நிகழ்வுகள்
837 – ஏலியின் வால்வெள்ளி புவிக்கு மிகக்கிட்டவாக (0.0342 AU அல்லது 5.1 மில்லியன் கிமீ) வந்தது.
1606 – வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக இலண்டன் பகம்பனி என்ற நிறுவனத்தை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னர் அமைத்தார்.
1656 – இலங்கையின் இடச்சுத் தளபதி ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் கொழும்பு நகரில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். ஒரு மாதத்தின் பின்னர் கொழும்பு டச்சுக்களிடம் வீழ்ந்தது.
1658 – ஊர்காவற்றுறைக் கோட்டை இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்டது.
1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.
1741 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: புருசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.
1809 – நெப்போலியப் போர்கள்: ஆஸ்த்திரியப் படை பவேரியாவை ஊடுருவியது.
1815 – இந்தோனீசியாவில் தம்போரா எரிமலை வெடித்ததில் பல தீவுகள் அழிந்தன. சூலை 15 வரை இது நீடித்தது. 71,000 பேர் உயிரிழந்தனர்.
1821 – கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி உதுமானிய அரசினால் தூக்கிலிடப்பட்டு, அவரது உடல் பொசுபோரசு நீரிணையில் எறியப்பட்டது.
1826 – துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
1858 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் 14.5 தொன் பிக் பென் மணி சோதனையின் போது வெடித்ததை அடுத்து, தற்போதைய 13.76 தொன் மணி அமைக்கப்பட்டது.
1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார்.
1868 – அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய-இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
1872 – முதலாவது மர நாள் நெப்ராஸ்காவில் கொண்டாடப்பட்டது.
1887 – உயிர்ப்பு ஞாயிறு அன்று அமெரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அனுமதி அளித்தார்.
1912 – டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.
1919 – மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகள் குரோவாசிய நாட்டை உருவாக்கின.
1963 – ஐக்கிய அமெரிக்காவின் திரெசர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் கடலில் மூழ்கியது.
1968 – நியூசிலாந்தின் வாகைன் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்தில் புயலினால் தாக்கப்பட்டு மூழ்கியதில், 734 பேரில் 53 பேர் உயிரிழந்தனர்.
1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 போர் வானூர்திகள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.
1973 – சுவிட்சர்லாந்து, பேசெல் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 108 பேர் உயிரிழந்தனர்.
1979 – அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் உயிரிழந்தனர்.
1984 – ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1985 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1991 – இத்தாலியின் மொபி பிரின்சு என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் உயிரிழந்தனர்.
1992 – லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரியக் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
1998 – பெல்பாஸ்ட் உடன்பாடு: அயர்லாந்துக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த உடன்பாடு எட்டப்பட்டது.
2002 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
2006 – இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வணிகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் உயிரிழந்தனர்.
2010 – போலந்து விமானம் ஒன்று உருசியாவில் சிமோலென்ஸ்க் நகரில் வீழ்ந்ததில், போலந்து அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி, அவரது மனைவி, மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 96 பேர் உயிரிழந்தனர்.
2016 – கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து: கேரளா பரவூரில் பண்டிகைக் கால வாணவெடிகள் வெடித்து தீ பரவியதில் நூற்றுக் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1755 – சாமுவேல் ஹானிமன், செருமானிய-பிரான்சிய மருத்துவர் (இ. 1843)
1829 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (இ. 1912)
1847 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய-அமெரிக்க ஊடகவியலாளர், பதிப்பாளர், அரசியல்வாதி (இ. 1911)
1865 – ஜாக் மைனர், அமெரிக்க-கனடிய சூழலியலாளர் (இ. 1944)
1887 – பெர்னார்டோ ஊசே, நோபல் பரிசு பெற்ற அர்ச்செந்தீன மருத்துவர் (இ. 1971)
1894 – கன்சியாம் தாசு பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1983)
1898 – ஆபிரகாம் கோவூர், இலங்கை-மலையாள பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர் (இ. 1978)
1927 – ஏ. சி. எஸ். ஹமீட், இலங்கை அரசியல்வாதி (இ. 1999)
1931 – கிஷோரி அமோன்கர், இந்துத்தானிப் பாடகர் (இ. 2017)
1932 – உமர் சரீப், எகிப்திய நடிகர் (இ. 2015)
1950 – எடீ ஹேசல், அமெரிக்க கித்தார் கலைஞர் (இ. 1992)
1952 – ஸ்டீவன் சீகல், அமெரிக்க நடிகர்
1957 – அலிக்கோ டங்கோட்டே, நைஜீரியத் தொழிலதிபர்
1959 – இரா. கோபால், தமிழக பத்திரிகையாளர், இதழாசிரியர்
1979 – இரேச்சல் கோரீ, அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 2003)
1980 – சார்லீ ஹூன்னம், ஆங்கிலேய நடிகர்
1986 – நாமல் ராசபக்ச, இலங்கை அரசியல்வாதி
1986 – ஆயிஷா தாக்கியா, இந்திய நடிகை
1990 – அலெக்ஸ் பெட்டிஃபேர், ஆங்கிலேய நடிகர்
1995 – இயன் நெல்சன், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1585 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1502)
1656 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், இலங்கையின் இடச்சு இராணுவத் தளபதி (பி. 1621)
1688 – பெர்னாவோ டி குவைறோஸ், இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் இயேசு சபை குருவானவர் (பி. 1617)
1813 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1736)
1863 – ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி, இத்தாலிய வானியலாளர், நுண்ணோக்கியாளர் (பி. 1786)
1922 – பிரம்மானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1863)
1931 – கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (பி. 1883)
1954 – அகுத்தே லூமியேர, பிரான்சிய இயக்குநர் (பி. 1862)
1964 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, தமிழ்நாட்டு தவில் கலைஞர் (பி. 1910)
1993 – கிரிசு ஹானி, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1942)
1995 – மொரார்ஜி தேசாய், இந்தியாவின் 6வது பிரதமர் (பி. 1896)
1998 – அ. துரையரசன், தமிழக அரசியல்வாதி (பி. 1922)
1999 – தகழி சிவசங்கரப் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (பி. 1912)
2010 – லேக் காச்சின்ஸ்கி, போலந்தின் 4வது அரசுத்தலைவர் (பி. 1949)
2012 – என். வரதராஜன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி
2013 – ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (பி. 1925)
2015 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் (பி. 1930)
சிறப்பு நாள்
உடன்பிறப்புகள் நாள்