அமெரிக்காவில் ஏப்ரல் 14ம் தேதியை சீக்கியர் தினம் கொண்டாடப் போவதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த நூறு வருடங்களாகவே சீக்கிய மக்கள் குடி புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் சீக்கிய மக்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க முடிவு எடுத்துள்ளனர். அந்த வகையில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வரும் கால கட்டத்தில் தேசிய சீக்கியர் தினம் கொண்டாட உள்ளனர்.
இதற்கான தீர்மானம் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சக உறுபினர்கள் சபையில் தாக்கலாகி உள்ளது. இந்நிலையில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ள மேரி.கே.ஸ்கான்லானின் முடிவிற்கு டொனால்டு நார்கிராஸ், பிரையன் பிட்ஸ்பேட்ரிக், பால் டோங்கோ, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரெண்டன பாய்லே, டேனியல் மியூசர், ரிச்சர்டு நீல், டேவிட் வலடாவ், எரிக் ஸ்வால்வெல், கேரன் பாஸ், ஜான் காரமென்டி, ஆன்டி கிம், ஜான் கரைமேல் ஆகிய சக எம்பிகள் ஆதரவளித்துள்ளனர். மேலும் சீக்கிய சமூகத்தினரும் இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.