இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 24
கிரிகோரியன் ஆண்டு : 114_ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 115_ஆம் நாள்
ஆண்டு முடிவிற்கு : 251 நாட்கள் உள்ளன .
இன்றைய தின நிகழ்வுகள் :
கிமு 1479 – எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார்.
1558 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது.
1704 – அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது.
1800 – அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது.
1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1877 – உருசியா உதுமானியப் பேரரசு மீது போர் தொடுத்தது..
1895 – உலகத்தை தனியாளாக முதற்தடவையாக சுற்றிய யோசுவா சிலோக்கம் மாசச்சூசெட்ஸ் பாஸ்டனில் இருந்து ஸ்பிறே என்ற படகில் புறப்பட்டார்.
1908 – லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
1915 – கான்ஸ்டன்டீனபோலில் 250 ஆர்மீனிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்மீனிய இனப்படுகொலை ஆரம்பமானது.
1916 – 1915 இல் தென்முனைப் பெருங்கடலில் மூழ்கிய என்டூரன்சு கப்பலையும், அதன் மாலுமிகளையும் மீட்கும் பொருட்டு ஏர்னெஸ்டு சாக்கில்டனும் மேலும் ஐவரும் யானைத் தீவு என்ற ஆளில்லா தீவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
1916 – அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர்.
1918 – முதலாம் உலகப் போர்: தாங்கிகளுக்கிடையேயான முதலாவது சமர் இடம்பெற்றது. பூன்று பிரித்தானியத் தாங்கிகளும், செருமனியின் மூன்று தாங்கிகளும் போரில் ஈடுபட்டன.
1926 – செருமனி, சோவியத் ஒன்றியம் இரண்டும் மூன்றாவது நாடு ஒன்று மற்றைய நாட்டைத் தாக்க முற்படும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடுநிலைமை வகிக்கும் உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டது.
1933 – நாட்சி ஜெர்மனி யெகோவாவின் சாட்சிகள் மீதான மத ஒறுப்பை ஆரம்பித்தது.
1955 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1957 – சூயெசு நெருக்கடி: ஐநா அமைதிப்படை தருவிக்கப்பட்டதை அடுத்து சுயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டது.
1961 – 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “வாசா” என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.
1965 – டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1967 – சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த உருசிய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது வான்குடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1970 – காம்பியா பொதுநலவாயத்தின் கீழ் குடியரசானது. தவ்தா யவாரா அதன் முதலாவது அரசுத்தலைவரானார்.
1990 – டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1993 – இந்தியாவில் பஞ்சாயத்து இராச்சியம் அமைக்கப்பட்டது.
1993 – லண்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
2004 – ஐக்கிய அமெரிக்கா லிபியா மீது 18 ஆண்டுகளுக்கு முன்னர் விதித்த பொருளாதாரத் தடையை நீக்கியது. லிபியா பேரழிவு ஆயுதங்களை அழிக்க உடன்பட்டது.
2005 – கர்தினால் யோசப் ராத்சிங்கர் கத்தோலிக்க திருச்சபை பதினாறாம் பெனடிக்டு என்ற பெயரில் 265-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
2006 – நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
2007 – பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
2013 – வங்காளதேசம், டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்:
1581 – வின்சென்ட் தே பவுல், பிரான்சிய மதகுரு, புனிதர் (இ. 1660)
1820 – ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908)
1880 – கிடியொன் சண்டுபெக்கு, பல்லிணைவுப் பட்டிகையை வடிவமைத்த சுவீடன்-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1954)
1888 – விஷ்ணுராம் மேதி, இந்திய அரசியல்வாதி, விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1981)
1889 – ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (இ. 1952)
1924 – எஸ். ஏ. டேவிட், ஈழத்துக் கட்டடக் கலைஞர், காந்தியம் அமைப்பைத் தோற்றுவித்தவர் (இ. 2015)
1929 – ராஜ்குமார், இந்திய நடிகர் (இ. 2006)
1933 – நொபொரு காராசிமா, சப்பானிய வரலாற்றாசிரியர், தமிழறிஞர் (இ. 2015)
1934 – ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர் (இ. 2015)
1934 – எல். கணேசன், தமிழக அரசியல்வாதி
1937 – சூலமங்கலம் ஜெயலட்சுமி, கருநாடக இசை, திரைப்படப் பின்னணிப் பாடகி
1941 – ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்க ஊடகவியலாளர், வங்கியாளர், ஐநா தூதுவர் (இ. 2010)
1941 – சான் வில்லியம்சு, ஆத்திரேலிய-ஆங்கிலேய இசையமைப்பாளர், கித்தார் கலைஞர்
1944 – அருண் நேரு, இந்திய அரசியல்வாதி (இ. 2013)
1947 – ரோஜர் கோர்ன்பெர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
1951 – தம்பிஐயா தேவதாஸ், ஈழத்து எழுத்தாளர்
1971 – குமார் தர்மசேன, இலங்கைத் துடுப்பாளர், நடுவர்
1973 – சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாலர்
1982 – கெல்லி கிளார்க்சன், அமெரிக்க நடிகை, பாடகி
1987 – வருண் தவான், இந்திய நடிகர்
இன்றைய தின இறப்புகள் :
1622 – சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (பி. 1577)
1731 – டானியல் டீஃபோ, ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர், உளவாளி (பி. 1660)
1866 – அனஸ்தாசியுஸ் ஹார்ட்மன், வட இந்தியாவில் பணியாற்றிய சுவிட்சர்லாந்து கத்தோலிக்க ஆயர் (பி. 1803)
1924 – கிரான்வில் ஸ்டான்லி ஹால், அமெரிக்க உளவியலாளர் (பி. 1844)
1960 – மேக்ஸ் வோன் உலோ, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1879)
1967 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விண்வெளி வீரர் (பி. 1927)
1976 – மார்க் டோபே, அமெரிக்க-சுவிட்சர்லாந்து ஓவியர் (பி. 1890)
2011 – சத்திய சாயி பாபா, இந்திய குரு (பி. 1926)
இன்றைய தின சிறப்புநாள் :
ஆர்மீனிய இனப்படுகொலை நினைவு நாள்
குழந்தைகள் நாள் (சாம்பியா)
குடியரசு நாள் (காம்பியா)
உலக ஆய்வக விலங்குகள் தினம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (இந்தியா)