Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏப்ரல் கொடுத்தோம்… மே கொடுத்தோம்…. ஜூன் கொடுத்தோம்…. அடுக்கிய முதல்வர் ….!!

தமிழகத்தில் உணவு பிரச்சனைக்கு இடமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நேற்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்தஆலோசனைனிக்கு பின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்னைக்கு முழுமையாக கிடைக்கின்றது. சென்னை மாநகரை பொறுத்தவரை பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படுகின்ற உணவு பொருட்கள் தங்கு தடை இல்லாமல் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

ஏப்ரல் மாதம் அரசி வாங்குகின்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி கொடுக்குறோம், சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு விலையில்லாமல் கொடுக்கின்றோம். 1000 ரூபாய் நிதியும் கொடுத்தோம். அதே போல மே மாதம் நான்கு பேர் இடம் பெற்றிருக்கின்ற, அரிசி பெறுகின்ற குடும்ப அட்டை வைத்து 20 கிலோ வாங்கி வந்தவர்களுக்கு 50 கிலோவாக அரிசியை உயர்த்தி கொடுத்தோம்.ஏப்ரல் மாதம் போல மே மாதமும், ஜூன் மாதமும் கொடுத்தோம். இதனால் உணவு பிரச்சனை என்பதற்கு இடமில்லை.

சென்னை மாநகராட்சி பகுதியில் இருக்கின்ற அம்மா உணவகத்தில் விலையில்லாமல் உணவு 31.05 வரை கொடுத்தார்கள். அம்மா கிச்சன் மூலமாகவும், தொண்டு நிறுவங்கள் மூலமாகவும் உணவு கொடுத்தார்கள்.  உணவு பிரச்சினைக்கே இடமில்லை, அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் சென்னை மாநகரத்தில் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்கள் அதனை ஏற்று சென்னை மாநகரத்தில் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி, டாக்ஸி ஓட்டுவதற்கு கட்டுப்பாடுடன் அனுமதி கொடுத்துள்ளோம். முடி திருத்தும் நிலையம், அழகு நிலையம்,  நகைக்கடை, ஜவுளிக்கடை இதையெல்லாம் அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையெல்லாம் தளர்வு அளிக்கப்பட்டிருக்கின்றன, நேரமும் அதிகப்படுத்த பட்டுள்ளது. அதேபோல டீக்கடை, உணவகங்கள் எட்டாம் தேதி முதல் காலை 6 மணி –  இரவு 8 மணி வரை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.  50 சதவீத இருக்கை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிர் சாதனத்தைப் பயன்படுத்த கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அரசு அறிவித்த தளர்வுகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

Categories

Tech |