உலகம் முழுவதும் மகளிர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், தொழிலாளர் தினம், குழந்தைகள் தினம் என்று பலவிதமான எண்ணங்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல முட்டாள்கள் தினம் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற தினங்களுக்கு உரிமை எடுத்து கொண்டாடுவதைப் போல இந்த தினத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள எவரும் முன்வருவதில்லை. அதேநேரம் தம்மை முட்டாளாக அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து கொண்டு அடுத்தவரை முட்டாளாக்கப் முனையும் நோக்கத்தினால், முட்டாள்தனமான அறிவாளிகளின் தினம் என்று கூட இதைக் கூறலாம்.
இந்த முட்டாள்கள் தினம் எப்படி உருவானது என்பது குறித்து பார்க்கலாம். 1500 களில் கடைப்பிடித்த ஒரு பழக்கமாக ஏப்ரல் ஏப்ரல்-1 கூறப்படுகிறது. ஏப்ரல் மாத ஆரம்பத்தில் பிரான்சில் உள்ள ஆறுகளிலும், நீரோடைகளிலும் நிறைய மீன்கள் இருக்குமாம். ஆனால் அந்த சமயத்தில் மீன்கள் பிடிப்பது மிக சுலபமாக இருக்குமாம். எனவே மீன்கள் மனிதர்களிடம் ஏமாறுவதால் ஏப்ரல்-1 ஏப்ரல் பூல் என்று அழைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி 1582 ஆம் ஆண்டில் இந்த உலகம் முழுவதும் ஜூலியன் காலண்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த காலண்டரை பொறுத்தவரை ஏப்ரல்-1 தான் புது வருடமாக கொண்டாடி இருந்துள்ளார்கள். ஆனால் 1582-இல் Gregorianvm என்ற காலண்டர் புதிதாக கொண்டுவரப்பட்டது. இதன்படி ஜனவரி-1 தான் புது வருடமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இப்போது வரைக்கும் இந்த காலண்டரை தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் இது உலகம் முழுவதுமாக சென்றடையவில்லை. அந்த காலத்தில் உள்ள நிறைய மக்களுக்கு இந்த காலண்டரை மாற்றிய விஷயம் தெரியாததால், அவர்கள் நண்பர்களிடம் சென்று ஏப்ரல்-1 அன்று புது வருட வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் இது நியூ இயர் கிடையாது ஏப்ரல் பூல் என்று சொல்லி கிண்டல் செய்துள்ளனர். இப்படி தான் முட்டாள்கள் தினம் உருவானது.