16 வயதுக்கு மேலானோர் சுகாதார மையங்களுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக கிரீன் பாஸ் திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அபுதாபியில் சுகாதார சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளுக்கு 16 வயதுக்கு மேலானோர் செல்லும்போது கண்டிப்பாக கிரீன் பாஸை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மையங்களில் அவசர சேவைப் பிரிவுகள் மற்றும் டிரைவ் த்ரூ பரிசோதனை வசதிகளை பெறுவதை தவிர்த்து மற்ற மருத்துவ ஆலோசனைகள் அனைத்திற்கும் கிரீன் பாஸ் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது நாளை முதல் அனைத்து அரசு சுகாதார மையங்களிலும் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 16 வயதுக்கு மேலானோர் தடுப்பூசி மையம் உள்ளிட்ட அனைத்து சுகாதார நிலையங்களும் செல்லும்பொழுது இதனை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.