கும்ப ராசி அன்பர்களே …! நீண்ட நாளைய கனவு நனவாகும். காலம் நீடித்த நோய் குணமாகும். உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. தொழிலில் புதிய பங்குதாரர்கள் பணிவார்கள். மாற்று சிந்தனை மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவை பூர்த்தியாகும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும்.
இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். பேசும் பொழுது கண்டிப்பாக நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு ஏதும் வேண்டாம். புதிதாக கடன் வாங்க வேண்டாம். காதலர்கள் பேச்சில் நிதானத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக இன்று கவனம் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.