Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “பொழுதுபோக்குக்காக பேசுபவரிடம் விலகி இருங்கள்”… பயணங்களின்போது கவனம்..!!

மற்றவர்களின் நலனுக்காக வாழக்கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று பொழுதுபோக்குக்காக பேசுபவரிடம் விலகி இருங்கள். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருப்திகரமான அளவில் கிடைக்கும் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று நண்பர்கள் உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுங்கள். நன்மையை கொடுக்கும். எந்த காரியத்திலும் சாதகமான பலனைப் பெற வாக்குவாதங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது. பயணங்களின்போது கவனமாக இருங்கள். எடுத்த காரியத்தில்  வெற்றி பெறுவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை கொடுப்பதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். புதியதாக தொழில் தொடங்குவதற்கான முடிவுகளை நீங்கள் அதிகப்படுத்துவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். வெற்றி வாய்ப்புகளை குவிக்கக் கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான விஷயத்தை செய்யும் போது கரு நீல  நிறத்தில் ஆடை அணிந்து செல்வது நல்லது. இல்லையேல் கரு நிறத்தில் கைக்குட்டை எடுத்து செல்வது நல்லது. இதனால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |