Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “இழுபறியான நிலை மாறும்”… எதிர்பாராத மனவருத்தம் ஏற்படும்..!!

பால் மனம் மாறாத குழந்தை தனம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும் நாளாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். இன்று இழுபறியான நிலை மாறி மனம் மகிழும் படியான சூழ்நிலை நிலவும். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். தொழில் மட்டும் கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். அது சரியாகிவிடும். பழைய பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் கொஞ்சம் சிறப்பை கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். இருந்தாலும் மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். உங்களுடைய பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படி யான வார்த்தைகள் வெளிப்பட கூடும்.

அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். மேலதிகாரிகளை மதித்து பேசுங்கள். அது போதும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பாராத மனவருத்தங்கள் திடீரென ஏற்படக்கூடும். குடும்பத்தாரிடம் கொஞ்சம் நட்பாக பழகும் போது கவனமாக பேசுங்கள். உங்களுடைய வார்த்தைகளில் தான் அனைத்து விஷயங்களும் இருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மனதார விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை  : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் காவி நிறம்

Categories

Tech |