பொறுமையின் சிகரமாக திகழக்கூடிய கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று முன்கோபத்தால் வீட்டில் குழப்பங்கள் கொஞ்சம் ஏற்படலாம். மனைவின் கழகத்தால் உறவுகளுக்குள் பகை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரியிடம் பணிவாக நடந்தால் அவர்களின் ஆதரவு இருக்கும். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாகவே நடந்து முடியும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும் . மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதால் செலவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசும்போது கொஞ்சம் பொறுமையாகவே பேசுங்கள்.
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக பாடத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் சிறப்பு. சக மாணவர்களுடன் பழகும் பொழுது கொஞ்சம் கவனமாகவே பழகுங்கள். நீங்கள் பேசும்போது கொஞ்சம் பொறுமையாக பேசுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுதோ கருநீலத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்டநிறம் : கருநீலம் மற்றும் மயில் நீல நிறம்