Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “விருப்பங்கள் நிறைவேறும்”… உங்களுடைய புகழ் ஓங்கும்.!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று புனிதப் பயணங்கள் கோவில் குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்பட்டு விருப்பங்கள் நிறைவேறும். உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். அரசின் ஆதரவு உண்டாகும். திடீர் கோபம் மட்டும் தலைதூக்கும். வீண்செலவு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பொறுமையாக சொல்லுங்கள். பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். யாரிடமும் எந்த விதமான வாக்கு வாதங்கள் வேண்டாம். வெளியூர் பயணங்கள் ஓரளவு நன்மையை கொடுக்கும்.

லாபம் நல்லபடியாக வந்து சேரும். இன்று பொறுமையும் நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கடினமாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணி மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது நீலநிற ஆடையஅல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும் அதுபோலவே இன்று நீங்கள் கட்டாயமாக காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |