கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தற்பெருமை குணம் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் வார்த்தைகளை மதித்து செயல்படவும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு இனிய அணுகுமுறை உதவும். சுமாரான அளவில் தான் பணம் கிடைக்கும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். இன்று யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிளவு நீங்கி ஒன்று சேர்வார்கள். அதாவது ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படக்கூடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். காரியங்களை நிதானமாக செய்யுங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள்.
அது மட்டும் இல்லை இன்று வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் பெற பாடங்களில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் பழகும் போது கவனமாக பழகுங்கள். கூடுமானவரை நீங்கள் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ நீலத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அது போலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருக பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்