கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வியாபார விரோதம் விலகிச்செல்லும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள முன்வருவீர்கள். இன்று காரியத்தடைகள் மனக்குழப்பம் டென்சன் போன்றவை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவை பற்றி கவலை வேண்டாம். நல்லபடியாகவே வந்து சேரும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. பாடங்களை மிக கவனமாக படிப்பது நல்லது. புதிய முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அதே போல வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்துச் செல்லுங்கள். எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. இன்று மனம் மகிழ்ச்சி பெறுவதற்கு இறைவன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் -போது, வெளியிடங்களுக்கு செல்லும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அது போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்