Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “புகழ் ஓங்கி நிற்கும்”… கோபத்தை தவிர்ப்பது நல்லது..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்களின் சகவாசத்தால் நன்மை நடக்கும். அரசின் ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசல் கதவை தட்டும். புகழ் ஓங்கி நிற்கும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். இன்று மற்றவருடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கள் கிடைக்காது. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். சிலரின்  எதிர்பாராத பேச்சு மன வருத்தத்தை கொடுக்கலாம். கவனம் இருக்கட்டும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். இன்று பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பணம் வந்துசேரும். அதுபோலவே வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அனைத்து விஷயங்களும் சரியாகும். சக மாணவர்களிடம் நீங்கள் ஒற்றுமையை பேணுவது நல்லது. இன்று வெளியில் நீங்கள் செல்லும் பொழுது சிகப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குருபகவான் வழிபாடு சிறப்பை கொடுக்கும். அதாவது சித்தரை மனதார நினைத்து வழிபடுங்கள். சித்தர் வழிபாடு சிறப்பாக அமையும். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |