குடும்பத்திற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு தன வரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை கொடுக்கும். பெயரும் புகழும் உயரும். புத்துணர்ச்சி கொடுக்கும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதில் மட்டும் கவனமாக இருங்கள். பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது நண்பர்களிடம், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மையை கொடுக்கும். காரியங்களில் இருந்த தடை தாமதம் விலகி செல்லும். முயற்சிகளில் உடனடியாக பலன் கிடைக்காது.
கொஞ்சம் கடுமையாகத்தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஓரளவு சிறப்பு கொடுக்கும். குடும்பம் இன்று ஓரளவு கலகலப்பாக காணப்படும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனத்தை செலுத்தி படிப்பது நல்லது. கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான இடத்திற்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். வெற்றிகளை குவிக்க முடியும். அது போலவே நீங்கள் முடிந்தால் விநாயகர் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிகமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்